அறத்துப்பால், VirtueChapter 15: பிறனில் விழையாமை
திருக்குறள் 141, பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
Transliteration
Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu
Aramporul Kantaarkan Il
English Translation
Who know the wealth and virtue's way After other's wife do not stray
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
Couplet (G.U. Pope Translation)
Who laws of virtue and possession's rights have known,Indulge no foolish love of her by right another's own
Explanation
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property