காமத்துப்பால், LoveChapter 126: நிறையழிதல்

திருக்குறள் 1251, நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Transliteration

Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu

English Translation

Passion's axe shall break the door Of reserve bolted with my honour

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

Couplet (G.U. Pope Translation)

Of womanly reserve love's axe breaks through the door,Barred by the bolt of shame before

Explanation

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty