காமத்துப்பால், LoveChapter 130: நெஞ்சொடுபுலத்தல்

திருக்குறள் 1294, நெஞ்சொடுபுலத்தல்

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

Transliteration

Inianna Ninnotu Soozhvaaryaar Nenje
Thuniseydhu Thuvvaaikaan Matru

English Translation

You won't sulk first and then submit Who will then consult you, my heart?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

Couplet (G.U. Pope Translation)

'See, thou first show offended pride, and then submit,' I bade;Henceforth such council who will share with thee my heart

Explanation

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?